20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு

16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது.

Update: 2021-09-12 22:10 GMT
இதற்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியில், கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறையை மீறியதற்காக ஓராண்டு தடை விதிக்கப்பட்ட நிரோஷன் டிக்வெல்லா, குசல் மென்டிஸ், குணதிலகா ஆகியோர் இடம் பெறவில்லை. சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கி கவனத்தை ஈர்க்கும் வகையில் பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்த சுழற்பந்து வீச்சாளர் 21 வயதான மஹீஷ் தீக்‌ஷனாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் பட்டியலை செப்டம்பர் 10-ந்தேதிக்குள் சமர்பிக்க ஐ.சி.சி. கெடு விதித்திருந்தது. ஆனால் இலங்கை விளையாட்டுத்துறை மந்திரியின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியது இருந்ததால் அணி பட்டியலை 2 நாள் தாமதமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 

இலங்கை அணி வருமாறு:- ஷனகா (கேப்டன்), தனஞ்ஜெயா டி சில்வா (துணை கேப்டன்), குசல் பெரேரா, தினேஷ் சன்டிமால், அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, சாரித் அசலங்கா, ஹசரங்கா, காமிந்து மென்டிஸ், சமிகா கருணாரத்னே, நுவான் பிரதீப், துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, மதுஷன்கா, தீக்‌ஷனா.

மேலும் செய்திகள்