20 ஓவர் உலகக் கோப்பை: நெட் பவுலராக இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் தேர்வு

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நெட் பந்து வீச்சாளராக இளம் வீரர் உம்ரான் மாலிக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-10-09 22:20 GMT
ஜம்மு -காஷ்மீர்,

ஜம்மு -காஷ்மீரின் இளம் வேகப்பந்து வீச்சாளர்  21 வயதான உம்ரான் மாலிக். இளம் வேகப்பந்துவீச்சாள இவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார். வெறும் 3 போட்டிகளில்  பங்கேற்றாலும் மனிக்கு 150 கி.மீ வேகத்தில் தொடர்ந்து பந்து வீசி பலரது கவனத்தை பெற்றார்.

 இவரது திறமையை கண்டு விராட் கோலியையும் வெகுவாக பாராட்டினார்.ஐ.பி.எல். தொடர் ஒவ்வொரு ஆண்டும் பல வீரர்களின் திறமைகளை வளர்க்கிறது. ஒரு இளம் வேகப்பந்துவீச்சாளர் 150  கி.மீ வேகத்தில் பந்துவீசுவதைப் பார்க்க நன்றாக உள்ளது என்று கூறினார்.

இரண்டு மாதங்களில் உம்ரான் கானின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பு உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடிக்கொண்டிருந்த அவர் தனது அதிவேக பந்துவீச்சின் மூலம்  தற்போது 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் நெட் பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இவர் நடப்பு ஐ.பி.எல்.லில் மணிக்கு 153 கிமீ வேகத்தில் பந்து வீசி அதிவேகமாக பந்துவீசியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்