மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: வார்னர், சவுதீ, அபித் அலி பெயர்கள் பரிந்துரை

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் டேவிட் வார்னர்.;

Update:2021-12-08 11:54 IST
ஐக்கிய அரபு அமீரகம் ,

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகள் விருதை  ஐசிசி வழங்கி வருகிறது. நவம்பர் மாதத்துக்கான விருது பெறுபவர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் , டிம் சவுதீ  மற்றும் அபித்  அலி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே போல் பெண்கள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் இடது கை ஸ்பின்னர் ஆனம் அமின், பங்களாதேஷின் நஹிதா அக்தர் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

20 ஓவர்  உலகக்கோப்பையில் மீண்டும் பார்முக்கு வந்து அசத்தி  ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்  டேவிட் வார்னர். 

அதே போல் வங்காளதேசத்துக்கு  எதிராக கலக்கும் பாகிஸ்தான் தொடக்க வீரர் அபித்  அலி பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவர் வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 133 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 91 ரன்களும் குவித்தார்.

அதே போல் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில் டிம் சௌதீ கேப்டன் பொறுப்பை ஏற்று நியூசிலாந்து அணியை வழிநடத்தினார்.இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய காரணத்தால் இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்