முதல் டி20: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது;
விசாகப்பட்டினம்,
இந்தியா வந்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டிக்கான போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி -இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி இலங்கை அணி ரன்கள் குவித்தது. பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அடுத்தது விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் விஷ்மி குணரத்ன 39 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 122 ரன்கள் இலக்குடன் இந்தியா விளையாடியது. தொடக்கத்தில் ஷாபாலி வர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா இருவரும் சிறப்பாக விளையாடி இலங்கை அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். ஸ்மிருதி மந்தானா 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜெமிமா அரைசதமடித்து அசத்தினார்.
இறுதியில் இந்தியா 14.4 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.