அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு

இவர் கடந்த ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியில் இடம்பெற்றிருந்தார்.;

Update:2025-12-22 18:47 IST

image courtesy:BCCI

மும்பை,

இந்திய ஆல் ரவுண்டரான கிருஷ்ணப்பா கவுதம் (37 வயது) அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரான கிருஷ்ணப்பா கவுதம் இந்திய அணிக்காக ஒரே ஒரு சர்வதேச போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொழும்புவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கி ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச அளவில் பெரிய அளவில் ஜொலிக்காவிட்டாலும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கவுதம் 59 முதல் தர போட்டிகளிலும் 68 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி 320 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இவர் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்காக ஆடியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. கடந்த சீசனில் இவர் லக்னோ அணிக்காக ஆடினார். மொத்தத்தில் 36 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடியுள்ள கவுதம் 247 ரன்களும், 21 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கிய தனது கிரிக்கெட் பயணத்திற்கு கிருஷ்ணப்பா கவுதம் இன்றுடன் முடிவு கட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்