டி20 உலகக் கோப்பை 2026: இந்த இந்திய வீரர்தான் அதிக விக்கெட் வீழ்த்துவார் - இர்பான் பதான்

டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.;

Update:2025-12-22 19:52 IST

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் பிப்.7-ந் தேதி மும்பையில் மோதுகிறது. அடுத்த ஆட்டத்தில் நமீபியாவை பிப்.12-ந் தேதி டெல்லியில் சந்திக்கிறது. 3-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை பிப்.15-ந் தேதி கொழும்பில் எதிர்கொள்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் பிப்.18-ந் தேதி ஆமதாபாத்தில் மோதுகிறது.

இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் கேப்டன் சூர்யகுமார், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து அணியை இறுதி செய்தனர்.

இந்நிலையில் இந்த தொடர் குறித்தும் இந்த தொடரில் அசத்த போகும் வீரர்கள் குறித்தும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்த வாய்ப்புள்ள பவுலர் குறித்து தனது கணிப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து பேசிய அவர், “எங்கள் பந்துவீச்சு கூட்டணி அற்புதம். முழு பொறுப்பும் பும்ரா மற்றும் வருண் மீதுதான் உள்ளது. வருண் சக்கரவர்த்தி சமீப காலமாக சிறப்பாக பந்து வீசி வருவதால், இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக மாறுவார் என்று நான் நினைக்கிறேன். வருணைப் பொறுத்து நிறைய விஷயங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். அவர் இந்திய அணிக்கு ஒரு துருப்புச் சீட்டாக இருக்க முடியும். அவரது தன்னம்பிக்கை மிகவும் உயர்ந்தது” என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்