ஐ.சி.சி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு - டாப் 10ல் இரண்டு இந்திய வீரர்கள்!

சர்வதேச கிரிக்கெட் சங்கம்(ஐ.சி.சி) இன்று டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

Update: 2022-01-05 10:55 GMT
புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட் சங்கம்(ஐ.சி.சி) இன்று டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை பட்டியலில், இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்து அசத்தி உள்ளார்.

அதேபோல, ஜஸ்பிரித் பும்ரா 9-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் கஜிசோ ரபாடா 6-வது  இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹாசில்வுட் ஒரு இடம் சறுக்கி  7-வது  இடத்துக்கு  தள்ளப்பட்டுள்ளார். அதேபோல, மிட்செல் ஸ்டார்க் ஒரு இடம் சறுக்கி 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்த தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறார். 

மேலும் செய்திகள்