2வது டி20 போட்டி; ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு..!

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

Update: 2023-12-09 10:44 GMT

Image Courtesy: @ZimCricketv

ஹராரே,

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 7ம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் ஜிம்பாப்வே அணி உள்ளது.

இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்