7 ரன்களில் சதத்தை தவறவிட்ட விராட் கோலி

301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.;

Update:2026-01-11 21:12 IST

காந்தி நகர்,

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 26 ரன்களில் அவுட் ஆன நிலையில் விராட் கோலி களமிறங்கினார். அவர் சும்பன் கில்லுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் கடந்தனர். கில் 56 ரன்களில் அவுட் ஆனார். அதேவேளை விராட் கோலி சதத்தை நோக்கி நெருங்கினார்.

ஆனால், 91 பந்துகளில் 93 ரன்கள் எடுத்த விராட் கோலி 39.1 ஓவரில் ஜேமிசன் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். இதன் மூலம் 7 ரன்களில் சதத்தை கோலி தவறவிட்ட்டார். 7 ரன்களில் 54வது சதத்தை விராட் கோலி தவறவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போதைய நிலவரப்படி இந்தியா 44.3 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிபெற 33 பந்துகளில் 42 ரன்கள் தேவை. ஹர்ஷித் ரானா 14 ரன்களிலும், கேஎல் ராகுல் 4 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்