விராட் கோலியை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அவர் ஒரு அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர் - பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா

விராட் கோலியை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம், அவர் எப்போது வேண்டுமானாலும் பார்முக்கு வரலாம் என கூறியுள்ளார்.

Update: 2022-08-21 16:21 GMT


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கோலி கடந்த 3 ஆண்டுகளாக சதங்கள் அடிக்க திணறிவருகிறார்.

2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு முன்னாள் கேப்டன் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் சதம் எதுவும் அடிக்கவில்லை. அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் அவரை பல முன்னாள் வீரரகள் விமர்சித்து வருகிறார்கள். அவரது பார்ம் ஆசிய கோப்பை ,உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா ஆசிய கோப்பை போட்டியில் விராட் கோலியை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என தனது அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஆசிய கோப்பை போட்டியில் விராட் கோலியை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர் சமீபகாலமாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவர் பார்மில் இல்லை என்றாலும் அவர் ஒரு அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் எப்போது வேண்டுமானாலும் பார்முக்கு வரலாம். ஆதலால், விராட் கோலியை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்