எனது மகனுக்கு இந்த இந்திய வீரரை முன்மாதிரியாக கூறுவேன் - பிரைன் லாரா

பிரைன் லாரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10,405 ரன்களும் அடித்துள்ளார்.;

Update:2023-12-02 20:29 IST

Image Courtesy: Twitter

டிரினிடாட்,

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தனது மகனுக்கு முன்மாதிரியாக பயன்படுத்துவேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவன் ஏதேனும் விளையாட்டில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டால், விராட் கோலி மாதிரி விளையாட வேண்டும் என்று கூறுவேன்.

மேலும் கோலியின் அர்ப்பணிப்பையும் வலிமை மட்டும் இல்லாமல், நம்பர் ஒன் விளையாட்டு வீரராக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பிரைன் லாரா டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 400 ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன் மொத்தமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10,405 ரன்களும் அடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்