ஐ.சி.சி. ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசை; ஆப்கானிஸ்தான் வீரர் முதலிடம்
ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த ஷகிப் அல் ஹசனின் பயணம் முடிவுக்கு வந்தது.;
image courtesy; ICC
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பிடத்தக்க மாற்றமாக ஒருநாள் போட்டிகளின் ஆல் ரவுண்டர் வரிசையில் நீண்ட காலங்களாக நம்பர் 1 இடத்தில் இருந்த வங்காளதேச வீரரின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஷகிப் அல் ஹசனை பின்னுக்கு தள்ளி ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.