சர்வதேச டி20 கிரிக்கெட்; வங்காளதேச அணிக்காக சிறந்த பந்துவீச்சு..சாதனை படைத்த முஸ்தாபிசுர்

அமெரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Update: 2024-05-26 07:13 GMT

Image Courtesy: @BCBtigers

ஹூஸ்டன்,

வங்காளதேச கிரிக்கெட் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே அமெரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வங்காளதேசத்துக்கு அதிர்ச்சி அளித்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆண்ரிஸ் கோஸ் 27 ரன்கள் எடுத்தார். வங்காளதேச அணியின் சார்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முஸ்தாபிசுர் ரஹ்மான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேச அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 108 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வங்காளதேச தரப்பில் தன்சித் ஹசன் 58 (42) ரன்களும், சவுமியா சர்கார் 43 (28) ரன்களும் எடுத்தனர். ஏற்கனவே அமெரிக்கா அணி தொடரை கைப்பற்றிவிட்டநிலையில், வங்காளதேச அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் 6 விக்கெட் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்காக சிறந்த பந்துவீச்சை முஸ்தாபிசுர் ரஹ்மான் (6/10) பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னர் எலியாஸ் சன்னி 4 ஓவர்களில் 13 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை முஸ்தாபிசுர் ரஹ்மான் முறியடித்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்காக சிறந்த பந்துவீச்சு;

முஸ்தாபிசுர் ரஹ்மான்: 4-1-10-6

எலியாஸ் சன்னி: 4-1-13-5

ஷகிப் அல் ஹசன்: 4-0-20-5

மொசாடெக் ஹொசைன்: 4-0-20-5

முஸ்தாபிசுர் ரஹ்மான்: 4-0-22-5

ஷகிப் அல் ஹசன்: 4-0-22-5

Tags:    

மேலும் செய்திகள்