ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் மோசமான சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Update: 2024-05-26 17:35 GMT

சென்னை,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசரஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 114 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் இலக்கை கடந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில், 113 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் குறைவான ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனை ஒன்றை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் குறைவான ரன்கள் எடுத்த அணிகள் விபரம்;

* சென்னை சூப்பர் கிங்ஸ் 125-9 (மும்பைக்கு எதிராக 2013)

* ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் 128-6 (மும்பைக்கு எதிராக 2017)

* மும்பை இந்தியன்ஸ் 129-8 (சென்னைக்கு எதிராக 2017)

* ராஜஸ்தான் ராயல்ஸ் 130-9 (குஜராத்துக்கு எதிராக 2022) 

Tags:    

மேலும் செய்திகள்