டெண்டுல்கரின் சாதனையை கோலியால் தொட இயலும் - ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

டெண்டுல்கரின் சாதனையை கோலியால் தொட இயலும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-21 08:51 GMT

Image Courtesy: AFP

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சேர்த்து (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) அதிக சதம் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர் ஆவார். அவர் 782 இன்னிங்சில் 100 சதம் அடித்துள்ளார். அதற்கு அடுத்தப்படியாக விராட் கோலி, ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தலா 71 சதத்துடன் உள்ளனர்.

33 வயதான விராட் கோலி சமீபத்தில் 1000 நாட்களை தாண்டிய பிறகு தான் சர்வதேச போட்டியில் சதம் அடித்தார். ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்த சதத்தை அடித்தார். இதன் மூலம் விராட் கோலி 71-வது சதத்தை தொட்டு பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார்.

டெண்டுல்கர் 2013-ம் ஆண்டிலும், பாண்டிங் 2012-ம் ஆண்டிலும் ஓய்வு பெற்று விட்டனர். இந்த நிலையில் விராட் கோலியால் 100 சதம் அடித்து டெண்டுல்கரின் சாதனையை தொட இயலும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். விராட் கோலி குறைந்த போட்டியில் விளையாடி 71 சதத்தை எடுத்துள்ளார்.

இன்னும் 30 சதங்கள் தான் அவருக்கு தேவை. ஒரு ஆண்டுக்கு 5 அல்லது 6 சதம் அடிக்கும் திறன் கொண்டவர். அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் அவரால் 100 சதங்களை எடுக்க இயலும்.

இவ்வாறு பாண்டிங் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்