மார்கஸ் ஸ்டோய்னிஸ் அரைசதம்...மும்பை அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி

லக்னோ அணி தரப்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 ரன்கள் எடுத்தார்.

Update: 2024-04-30 17:57 GMT

Image Courtesy: AFP 

லக்னோ,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லக்னோவில் இன்று நடைபெற்ற 48வது லீக் ஆட்டத்தில் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 46 ரன், டிம் டேவிட் 35 ரன் எடுத்தனர்.

லக்னோ தரப்பில் மோஷின் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் இம்பேக்ட் வீரர் அர்ஷின் குல்கர்னி ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் குல்கர்னி 0 ரன்னிலும், ராகுல் 28 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் தீபக் ஹூடா 18 ரன்னிலும், ஸ்டோய்னிஸ் அரைசதம் அடித்த நிலையில் 62 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆஷ்டன் டர்னர் ஜோடி சேர்ந்தனர். இதில் டர்னர் 5 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய பதோனி 6 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் பாண்ட்யா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்