20 ஓவர் உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக மேத்யூ ஹைடன் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மேத்யூ ஹைடன் நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2022-09-09 21:50 IST

Image Tweeted By @ICC

கராச்சி,

20 ஓவர் உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வலுவான அணியாக திகழ்வதால் டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் அணி பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் மேத்யூ ஹைடன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக மேத்யூ ஹைடன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்