அதிக டி20 போட்டிகளில் விளையாடி பொல்லார்ட் சாதனை

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 100 பந்து போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

Update: 2022-08-09 18:52 GMT

கோப்புப்படம் 


டி20 கிரிக்கெட்டில் 600 போட்டிகளில் விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார் பொல்லார்ட். லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 100 பந்து போட்டியில் விளையாடியதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

ஜூன் 2008 இல் பொல்லார்ட் தனது முதல் டி20 போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை 101 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு கேப்டனாக இருந்த பொல்லார்ட் மூன்று மாதங்களுக்குப் முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின்னர் கிளப் தொடர் மற்றும் ஐபிஎல் போன்ற லீக் போட்டிகளில் விளையாடி வரும் பொல்லார்ட் தற்போது லண்டனில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறார்.

டி20-யில் பொல்லார்டு 1,569 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார். இவர் 99 சிக்சர்களை அடித்துள்ளார். இது வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் மூன்றாவது அதிகபட்ச சிக்ஸர்கள் ஆகும். 2012-ல் இலங்கையில் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்திய அணியிலும் இவர் இடம் பிடித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்