எஸ்.ஏ. 20 ஓவர் லீக்; ஜான்சன் அபார ஆட்டம் - பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்தி ஈஸ்டர்ன் கேப் வெற்றி

ஈஸ்டர்ன் கேப் தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கோ ஜான்சென் 31 பந்தில் 71 ரன்கள் குவித்து அசத்தினார்.

Update: 2024-02-03 01:56 GMT

Image Courtesy: @SA20_League

பார்ல்,

தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக் (எஸ்.ஏ. 20 ஓவர் லீக்) தொடரின் 2வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஈஸ்டர்ன் கேப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

ஈஸ்டர்ன் கேப் தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கோ ஜான்சென் 31 பந்தில் 71 ரன்கள் குவித்து அசத்தினார்.

ராயல்ஸ் அணி தரப்பில் இவான் ஜோன்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 44 ரன் வித்தியாசத்தில் ஈஸ்டர்ன் கேப் அணி அபார வெற்றி பெற்றது. ஈஸ்டர்ன் கேப் தரப்பில் மார்கோ ஜான்சென், லியாம் டாவ்சென், பெயர்ஸ் ஸ்வான்போல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்