இந்தியாவுக்கு எதிரான 4-வது டி20 : தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு

தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

Update: 2022-06-17 13:08 GMT

Image Courtesy : Twitter @BCCI

ராஜ்கோட்,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்த தொடரில் வெற்றியை தொடரும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 4-வது ஆட்டத்தில் களம் காணுகிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்