ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு

மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட மதீஷா பதிரனாவுக்கு இலங்கை அணியில் இடம் கிடைத்துள்ளது.

Update: 2022-08-20 13:16 GMT

Image Courtesy: ICC Twitter

கொழும்பு,

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஆசிய கோப்பை தொடர் நெருங்கிவரும் நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆசிய கோப்பை தொடருக்கான இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனகா தலைமையில் அந்த அணி களம் இறங்குகிறது.

மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட மதீஷா பதிரனாவுக்கு ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஆசிய கோப்பை டி20 கோப்பைக்கான இலங்கை அணி வீரர்கள் விபரம்,

தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், சாரித் அசலங்கா, பானுகா ராஜபக்சா, ஆஷன் பண்டாரா, தனஞ்செயா டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மஹேஷ் தீக்‌ஷனா, ஜெப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா,சாமிகா கருணரத்னே, தில்ஷான் மதுஷங்கா, மதீஷா பதிரனா, நுவானிது பெர்னாண்டோ, துஷ்மந்தா சமீரா,தினேஷ் சண்டிமால்.

Tags:    

மேலும் செய்திகள்