சூர்யகுமார் யாதவ் அபாரம்: பஞ்சாப் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த மும்பை

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.

Update: 2024-04-18 15:55 GMT

சண்டிகார்,

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று சண்டிகாரில் நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிவந்த ரோகித் சர்மா, 25 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த சூர்யகுமார் யாதவ், அரைசதமடித்தார். அவர் 53 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி வீரர்களான ஹர்திக் 10 ரன்னிலும், டிம் டேவிட் 14 ரன்னிலும், சைபர்ட் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில், திலக் வர்மா அதிரடி காட்ட, மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்