தமிழக வீரர் நடராஜன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார் - முன்னாள் வீரர் பாலாஜி நம்பிக்கை
காயம் அடைவது தடுக்க முடியாத ஒன்று. அத்தகைய சூழலில் தான் தற்போது நடராஜன் இருக்கிறார்;
Image Courtesy : AFP
கிரிக்கெட் போட்டிகளில் தமிழக வீரர் நடராஜன் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாலாஜி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..
நடராஜன் கடந்து வந்த பாதை மிகப் பெரியது. அதுவே அவருக்கான வெற்றி.காயங்களால் அவதிப்படும் நடராஜன் அதை தாண்டி மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவார். வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைவது தடுக்க முடியாத ஒன்று. அத்தகைய சூழலில் தான் தற்போது நடராஜன் இருக்கிறார். நடராஜன் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என தெரிவித்துள்ளார்
தமிழக வீரர் நடராஜன் குறித்து மனம் திறந்த லட்சுமிபதி பாலாஜி#LakshmipathyBalaji | #Natarajan | #TamilNaduplayerNatarajanhttps://t.co/CZioEciKHU
— Thanthi TV (@ThanthiTV) March 15, 2023