ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது.;
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிந்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிகான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பேட்டர்களில் ஒல்லி போப்-க்கு பதிலாக பெத்தேல் அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும் பந்து வீச்சாளர்களில் காயம் காரணமாக ஆர்ச்சர் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக கஸ் அட்கின்சன் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்துஅணி:
ஜாக் கிராலி, பென் டக்கெட், பெத்தேல், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், கார்ஸ், ஜோஸ் டங்.