தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் தமிம் இக்பால்..!
தமிம் இக்பால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,;
Image Courtesy : AFP
2007-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இடது கை தொடக்க பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய தமிம் இக்பால் தனது 34 வயதில் நேற்று ஓய்வு முடிவை அறிவித்தார்.
இவர் வங்கதேச அணியின் ஒருநாள் வடிவிலான அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தார்.இந்நிலையில் திடீரென்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
இந்த நிலையில் தமிம் இக்பால் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
வங்களதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை தமிம் இக்பால் இன்று சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்புக்கு பின் தமிம் இக்பால் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த பெருமை இவரிடம் தான் உள்ளது.இவர் வங்கதேச அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 14 சதங்கள் உட்பட 8313 ரன்கள் குவித்துள்ளார்.சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 70 ஆட்டங்களில் 10 சதங்களுடன் 5134 ரன்கள் எடுத்துள்ளார்