அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட உலகக்கோப்பை தொடர்!

இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் 463 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே (48 ஆட்டங்கள்) அதிகபட்சமாக இருந்தது.

Update: 2023-11-07 03:08 GMT

புது டெல்லி,

13-வது உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றை எட்டியுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி வங்காளதேச அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 14 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இந்த 14 சிக்சர்களையும் சேர்த்து நடப்பு உலகக்கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட சிக்சர்களின் எண்ணிக்கை 477 ஆக (38 ஆட்டங்கள்) உயர்ந்தது.

இதன் மூலம் ஒரு உலகக்கோப்பையில் நொறுக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர்களாக இது பதிவானது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் 463 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே (48 ஆட்டங்கள்) அதிகபட்சமாக இருந்தது. நடப்பு உலகக்கோப்பை தொடரில் இன்னும் ஆட்டங்கள் மீதமுள்ளதால் சிக்சர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்