முத்தரப்பு டி20 கிரிக்கெட்; டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு

இந்த தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் ஸ்காட்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

Update: 2024-05-22 14:47 GMT

image courtesy: @KNCBcricket

ஹேக்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் இம்முறை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ள 20 அணிகளில் பாகிஸ்தானை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது அணி விவரங்களை அறிவித்து விட்டன.

இந்த தொடரில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் ஆட உள்ளன. இந்நிலையில் இந்த தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த 3 அணிகளும் முத்தரப்பு டி20 தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் ஸ்காட்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்