அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 : இந்திய அணிக்காக முதல் முறையாக களமிறங்கும் உம்ரான் மாலிக்..!!
இந்திய அணியின் இன்றைய பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் இடம் பெற்றுள்ளார்.;
Image Courtesy : BCCI
டப்ளின்,
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் இடம் பெற்றுள்ளார். இந்த தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. இந்திய அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கவுள்ள உம்ரான் மாலிக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.