சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் விளையாட மான்செஸ்டர் சிட்டி அணிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடை நீக்கம்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் விளையாட மான்செஸ்டர் சிட்டி அணிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2020-07-13 21:45 GMT
ஜெனிவா, 

இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடும் முன்னணி அணியான மான்செஸ்டர் சிட்டி அணி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அத்துடன் அந்த விவகாரம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் விளையாட 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஐரோப்பிய கால்பந்து சங்க கூட்டமைப்பு கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த நடவடிக்கையை எடுத்தது. தன் மீதான தடையை எதிர்த்து மான்செஸ்டர் சிட்டி அணி நிர்வாகம் சார்பில் விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்யப்பட்டது. 

இதனை விசாரித்த நீதிபதிகள் மான்செஸ்டர் சிட்டி அணி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி 2 ஆண்டு தடையை நீக்கி உத்தரவிட்டனர். அத்துடன் அந்த அணிக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.85 கோடியாக குறைக்கப்பட்டது. தடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் மான்செஸ்டர் சிட்டி அணி வருகிற சீசனில் நடைபெறும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்க முடியும்.

மேலும் செய்திகள்