ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை சிட்டி எப்.சி

மே 4ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

Update: 2024-04-29 18:25 GMT

Image Courtesy: @MumbaiCityFC

மும்பை,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் மற்றும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிவில் ஒடிசா எப்.சி. மோகன் பகான், எப்.சி கோவா, மும்பை சிட்டி எப்.சி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இதையடுத்து 2 சுற்றுகளாக (உள்ளூர் மற்றும் வெளியூர்) நடக்கும் அரையிறுதி சுற்று ஆட்டங்களில் முறையே ஒடிசா எப்.சி - மோகன் பகான், எப்.சி கோவா- மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின. இதில் ஒடிசா எப்.சி - மோகன் பகான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டங்களில் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி அணியை வீழ்த்தி மோகன் பகான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

எப்.சி கோவா- மும்பை சிட்டி எப்.சி அணிகள் இடையிலான அரையிறுதி ஆட்டத்தின் (சுற்று -1) முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான அரையிறுதி ஆட்டத்தின் 2வது சுற்று ஆட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் களம் புகுந்த கோவா அணி 0-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதி ஆட்டங்களில் முடிவில் 5-2 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணியை வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து மே 4ம் தேதி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்