ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்; ஐதராபாத் அணியை வீழ்த்தி ஒடிசா அசத்தல் வெற்றி

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.;

Update:2024-02-05 21:51 IST

Image Courtesy: @IndSuperLeague / @OdishaFC/ @RoyKrishna21

ஐதராபாத்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா - ஐதராபாத் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஒடிசா அணி அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தியது.

ஒடிசா அணி தரப்பில் டியாகோ மொரிசியோ (27 மற்றும் 75வது நிமிடம்) 2 கோலும், ராய் கிருஷ்ணா (45+1 வது நிமிடம்) 1 கோலும் அடித்தனர். ஆட்ட நேர முடிவில் ஒடிசா அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்