போர் விமான பாதுகாப்புடன் பயணித்த போலந்து கால்பந்து வீரர்கள்...!

22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நாளை தொடங்குகிறது.;

Update:2022-11-19 01:25 IST

வார்சா,

22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. உலகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியை காண பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர், ரசிகைகள் கத்தாரை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள போலந்து அணி விமானம் மூலம் கத்தார் புறப்பட்டு சென்றது. முன்னதாக வீரர்கள் சென்ற போலந்து விமானம் ரஷியா-உக்ரைன் எல்லையை தாண்டும் வரை பாதுகாப்புக்கு போர் விமானங்கள் பின்தொடர்ந்து சென்றன.

சில தினங்களுக்கு முன்பு ரஷியா வீசிய ஏவுகணை போலந்து எல்லையில் விழுந்து வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்