இந்தியாவில் கால்பந்துக்கு பிரகாசமான எதிர்காலம்: மெஸ்சி

மெஸ்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்;

Update:2025-12-17 17:36 IST

புதுடெல்லி,

அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்சி 3 நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லி ஆகிய 4 நகரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப வேண்டிய நிலையில், அவரது பயணம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் ஜாம்நகர் சென்ற அவர், ஆனந்த் அம்பானியின் உயிரியல் பூங்காவான வனதாராவையும் சுற்றிப் பார்த்தார். பின்னர் அவர் அமெரிக்கா புறப்பட்டார்.

இந்த நிலையில், மெஸ்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

“நமஸ்தே இந்தியா. டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா என அற்புதமான பயணம். இந்த சுற்றுப் பயணம் முழுவதும் அன்பான வரவேற்புக்கும், சிறப்பான விருந்தோம்பலுக்கும், அன்பின் வெளிப்பாட்டுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் கால்பந்துக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.”

இவ்வாறு அந்த வீடியோவில் மெஸ்சி தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்