கால்பந்து ஜாம்பவான் பாபி சார்ல்டன் காலமானார்

இங்கிலாந்து நாட்டின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பாபி சார்ல்டன் காலமானார்.

Update: 2023-10-22 06:52 GMT

லண்டன்,

உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டு வீரர்களிடையே மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தவர் பாபி சார்ல்டன். இந்தநிலையில் பாபி சார்ல்டன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 86. அவரது மறைவிற்கு, ஐரோப்பிய கால்பந்து யூனியன், சர்வதேச கால்பந்து அமைப்புகள், கால்பந்து ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேன்செஸ்டர் யூனைடெட் கிளப் அணிக்காக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ள பாபி சார்ல்டன், முதன்முறையாக அந்த அணி ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் தொடரில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார்.

கடந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற மூனிச் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சார்ல்டன், அடுத்தடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார்.

1966 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெல்வதற்கு சார்ல்டன் முக்கிய காரணமாக இருந்துள்ளார். மான் செஸ்டர் யுனைட்டட் அணிக்காக 249 கோல்களும், இங்கிலாந்து அணிக்காக 49 கோல்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்