உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்சி கோலால் அர்ஜென்டினா அபாரம்

உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெற்றது.

Update: 2023-10-18 22:19 GMT

image courtesy: Inter Miamai twitter via ANI

லிமா,

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

இந்த நிலையில் லிமா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தகுதி சுற்று ஒன்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் பெருவை தோற்கடித்து தொடர்ந்து 4-வது வெற்றியை பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அர்ஜென்டினா அணியில் இரு கோல்களையும் லயோனல் மெஸ்சி (32 மற்றும் 42-வது நிமிடம்) அடித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் மெஸ்சியின் கோல் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது.

மற்றொரு ஆட்டத்தில் உருகுவே 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. முன்னதாக பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் 44-வது நிமிடத்தில் எதிரணி வீரர் இடித்து தள்ளியதில் கீழே விழுந்து கால்முட்டியில் காயமடைந்து, கண்ணீர் மல்க ஸ்டிரச்சரில் தூக்கி செல்லப்பட்டார். 4-வது லீக்கில் ஆடிய பிரேசிலுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

Tags:    

மேலும் செய்திகள்