உலக கோப்பை கால்பந்து: செனகல் அணியில் இருந்து சாடியோ மனே விலகல்

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான செனகல் அணியில் இருந்து சாடியோ மனே விலகியுள்ளார்.;

Update:2022-11-19 02:31 IST

தோகா,

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான செனகல் அணியில் இடம் பெற்றிருந்த முன்கள வீரர் சாடியோ மனேவுக்கு கிளப் போட்டியில் ஆடிய போது வலது காலில் காயம் ஏற்பட்டது. காயத்தன்மையை நேற்று பரிசோதித்த டாக்டர்கள், காயம் இன்னும் சரியாகவில்லை. ஆபரேஷன் செய்ய வேண்டி இருக்கும் என்று கூறினர்.

இதையடுத்து உலக கோப்பை போட்டியில் இருந்து சாடியோ மனே விலகியுள்ளார். 30 வயதான சாடியோ ஆப்பிரிக்காவின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 2 முறை பெற்றவர் ஆவார். அவரது விலகல் செனகலுக்கு பின்னடைவு தான். 'ஏ' பிரிவில்அங்கம் வகிக்கும் செனகல் அணி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 21-ந்தேதி மோதுகிறது.

இதே போல் அர்ஜென்டினா வீரர்கள் ஜாக்குவின் கோரியா, நிகோலஸ் கோன்சலேஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்