ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா - மலேசியா ஆட்டம் டிரா..!

11-வது ஆசிய கோப்பை ஆக்கி தொடர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடந்து வருகிறது.

Update: 2022-05-30 07:03 GMT

image courtesy: Hockey India twitter via ANI

ஜகார்த்தா,

11-வது ஆசிய கோப்பை ஆக்கி தொடர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் மலேசியாவை நேற்று எதிர்கொண்டது.

முதல் 21 நிமிடங்களுக்குள் மலேசியா 2 கோல் அடிக்க, அதன் பிறகு சுதாரித்து மீண்ட இந்திய அணி வரிசையாக 3 கோல்கள் போட்டது. விஷ்ணுகந்த் சிங், எஸ்.வி.சுனில், நீலம் சஞ்ஜீப் கோல் அடித்தனர். இதனால் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தொடர்ந்து 56-வது நிமிடத்தில் மலேசியாவின் ராஸி ரஹிம் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற திரில்லிங்கான இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்தது. இந்திய அணி தனது கடைசி லீக்கில் தென்கொரியாவுடன் நாளை மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Tags:    

மேலும் செய்திகள்