ஆக்கி தரவரிசை : இந்திய ஆண்கள் அணி சரிவு
சர்வதேச பெண்கள் ஆக்கி தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் நீடிக்கிறது.;
image courtesy: twitter/@TheHockeyIndia
புதுடெல்லி,
சர்வதேச ஆக்கி சம்மேளனம் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் இந்திய ஆண்கள் அணி 4-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 'ஒயிட்வாஷ்' ஆனது. இதனால் இத்தகைய சரிவை சந்தித்துள்ளது.
இந்திய அணி தரவரிசையில் முன்னேற, அடுத்து ஐரோப்பாவில் நடக்கவுள்ள புரோ லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். முதல் மூன்று இடங்களில் முறையே நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன.
பெண்கள் அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் நீடிக்கிறது.