தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஆக்கி: அரியானா அணி சாம்பியன்

தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஆக்கி தொடரில் அரியானா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Update: 2024-03-24 06:52 GMT

image courtesy: twitter/@TheHockeyIndia

புனே,

14-வது தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் ஆக்கி தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் மராட்டியம் - அரியானா அணிகள் புனேவில் உள்ள மேஜர் தயான்சந்த் மைதானத்தில் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூட் - அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அரியானா 3-0 என்ற கோல் கணக்கில் மராட்டிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அரியானா இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2013 மற்றும் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

இறுதிப்போட்டியில் அரியானா தரப்பில் தீபிகா வழக்கமான நேரத்திலும், நவ்னீத் கவுர், உஷா மற்றும் சோனிகா ஆகியோர் சூட் - அவுட்டிலும் கோல் அடித்து அணி வெற்றி பெற உதவினர். ஆனால் மும்பை தரப்பில் அக்ஷதா அபஸ்கோ மட்டுமே 1 கோல் அடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்