சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்: தபால் துறை அணியை வீழ்த்தி ஏ.ஜி.அலுவலக அணி வெற்றி

நேற்று நடந்த ஆட்டத்தில் ஏ.ஜி. அலுவலகம் - தமிழ்நாடு தபால் துறை அணிகள் மோதின.

Update: 2024-03-13 21:08 GMT

கோப்புப்படம் 

சென்னை,

59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஏ.ஜி. அலுவலகம் - தமிழ்நாடு தபால் துறை அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்த ஏ.ஜி. அலுவலக அணி 7-0 என்ற கோல் கணக்கில் தபால் துறை அணியை தோற்கடித்தது. ஏ.ஜி.அலுவலக அணியில் மகேந்திரன் 2 கோலும், வினோத் குமார், தங்கராஜ், அப்ரோன், வீரதமிழன், ரஞ்சித் தலா ஒரு கோலும் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 6-2 என்ற கோல் கணக்கில் தெற்கு ரெயில்வேயை வென்றது. வருமான வரி அணியில் கார்த்தி 2 கோலும், பீம் யாதவ், மாரீஸ்வரன், சார்லஸ், அருண்குமார் தலா ஒரு கோலும், தெற்கு ரெயில்வே அணியில் துஷால், சண்முகம் தலா ஒரு கோலும் போட்டனர்.

இன்றைய ஆட்டங்களில் சென்னை மாநகர போலீஸ்- ஸ்டேட் வங்கி (பிற்பகல் 2 மணி), அடையார் யுனைடெட் கிளப்-தமிழ்நாடு போலீஸ் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்