சூப்பர் டிவிசன் ஆக்கி லீக்; தமிழ்நாடு தபால் துறையை வீழ்த்தி வருமான வரி அணி வெற்றி

59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

Update: 2024-03-12 01:18 GMT

சென்னை,

59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஐ.சி.எப். அணி 6-3 என்ற கோல் கணக்கில் ஏ.ஜி.அலுவலகத்தை பந்தாடியது.

மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 4-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு தபால் துறையை வீழ்த்தியது. இன்றைய ஆட்டங்களில் தமிழ்நாடு போலீஸ்-ஜி.எஸ்.டி. மற்றும் கலால் வரி (பிற்பகல் 2 மணி), ஐ.ஓ.பி.-சென்னை மாநகர போலீஸ் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்