பீஜிங் ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலம்:பளுதூக்கும் வீராங்கனைகளின் தங்கப்பதக்கம் பறிப்பு

பீஜிங் (2008–ம் ஆண்டு), லண்டன் (2012) ஒலிம்பிக் போட்டிகளின் போது நிறைய பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியது.

Update: 2017-01-13 22:00 GMT
லாசானே, 

பீஜிங் (2008–ம் ஆண்டு), லண்டன் (2012) ஒலிம்பிக் போட்டிகளின் போது நிறைய பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து வீரர், வீராங்கனைகளிடம் இருந்து ஏற்கனவே பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டிருந்த ரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகளை மறுசோதனைக்குட்படுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டது. 

மறுசோதனையில் சீன பளுதூக்குதல் வீராங்கனைகள் காவ் லீ (75 கிலோ), சென் ஸிசியாவ் (48 கிலோ), லியு சுங்ஹாங் (69 கிலோ) ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இவர்கள் மூன்று பேரும் பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர்கள். இதையடுத்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவர்களின் தங்கப்பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சீன பளுதூக்குதல் அணிக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஒரு ஆண்டு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்