ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மரணம்

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் நீச்சல் ஜாம்பவானான அடோல்ப் கீபெர் (வயது 98) நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

Update: 2017-05-07 21:45 GMT

சிகாகோ,

1936–ம் ஆண்டு பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் நீச்சல் பந்தயத்தில் 17 வயதான அடோல்ப் கீபெர் புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். அவரது ஒலிம்பிக் சாதனை 20 ஆண்டுகள் நிலைத்து இருந்தது. 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் 1 நிமிடத்துக்குள் பந்தய தூரத்தை கடந்த முதல் வீரர் என்ற பெருமைக்குரிய அடோல்ப் கீபெர், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர்களில் அதிக வயது வரை வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்