து ளி க ள்

ஆசிய விளையாட்டில் ஹேண்ட்பால் போட்டி முன்கூட்டியே தொடங்கி நடந்து வருகிறது.

Update: 2018-08-15 22:15 GMT

* இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சங்கக்கரா அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணி, கேப்டன் விராட் கோலியை மட்டுமே நம்பி இருப்பதாக சொல்வது நியாயமற்றது. கடந்த சில ஆண்டுகளாக கோலியின் ஆட்டத்தை பார்த்து வருகிறேன். அவர் வியப்புக்குரிய வகையில் விளையாடி வருகிறார். அதே நேரத்தில் மற்ற வீரர்களும் சிறந்தவர்கள் தான். புஜாராவும், ரஹானேவும் அற்புதமான பேட்ஸ்மேன்கள். புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் சராசரி 50 ரன்களுக்கு மேல் வைத்துள்ளார். வெளிநாட்டு மண்ணில் ரஹானேவின் சராசரி 50 ரன்களுக்கு மேல் உள்ளது. இதே போல் லோகேஷ் ராகுல், முரளிவிஜய், தவான், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் திறமையானவர்கள் தான். போதிய அளவுக்கு தயாராகாதது, இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் தடுமாற்றத்திற்கு ஒரு காரணமாகும்.’ என்றார்.

* ஆசிய விளையாட்டில் ஹேண்ட்பால் போட்டி முன்கூட்டியே தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (டி பிரிவு) இந்திய அணி 25-32 என்ற புள்ளி கணக்கில் பக்ரைனிடம் தோல்வி அடைந்தது. இந்தியாவுக்கு இது 2-வது தோல்வியாகும்.

* டென்னிஸ் தரவரிசையில் மிகவும் பின்தங்கியுள்ள சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, பல்கேரியாவின் அஸரென்கா ஆகியோருக்கு வருகிற 27-ந்தேதி தொடங்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நேரடியாக பங்கேற்கும் வகையில் வைல்டு கார்டு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

* பாலெம்பேங் நகரில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான கிராமத்தில் இந்திய குழுவினர் தேசிய கொடியை ஏற்றி நேற்று சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

மேலும் செய்திகள்