கேலோ இந்தியா விளையாட்டு நிறைவு: 256 பதக்கங்கள் குவித்து மராட்டியம் ‘சாம்பியன்’

கேலோ இந்தியா விளையாட்டு நிறைவடைந்தது. அதில் 256 பதக்கங்கள் குவித்து மராட்டியம் ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

Update: 2020-01-23 01:13 GMT
கவுகாத்தி,

3-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. ஏறக்குறைய 6,800 வீரர், வீராங்கனைகள் 20 வகையான பந்தயங்களில் பங்கேற்று தங்களது திறமையை வெளிக்காட்டினர். 13 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு போட்டி நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. மராட்டிய மாநிலம் 78 தங்கம், 77 வெள்ளி, 101 வெண்கலம் என்று மொத்தம் 256 பதக்கங்களுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

அரியானா 68 தங்கம் உள்பட 200 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பெற்றது. தமிழ்நாடு 22 தங்கம், 32 வெள்ளி, 22 வெண்கலம் என்று 76 பதக்கங்களுடன் 6-வது இடத்தை பிடித்தது.

மேலும் செய்திகள்