கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.

Update: 2024-04-28 06:56 GMT

சென்னை,

'பிடே' கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் 8 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.

இந்நிலையில், கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செஸ் வீரர் குகேஸ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். அப்போது, குகேசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். மேலும், குகேசுக்கு 75 லட்ச ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்