ஆசிய விளையாட்டு; பதக்க பட்டியலில் 7ம் இடத்தில் இந்தியா...!

45 நாடுகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

Update: 2023-09-24 00:56 GMT


Live Updates
2023-09-24 13:35 GMT

கால்பந்து:

கால்பந்து ஆண்கள் பிரிவில் குரூப் ஏ சுற்றில் இந்தியா - மியான்மர் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தது. இதன் மூலம் 1-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டி சமனில் முடிந்தது.

2023-09-24 13:33 GMT

டேபிள் டென்னிஸ் காலிறுதி சுற்று

டேபிள் டென்னிஸ் ஆண்கள் காலிறுதி சுற்றில் இந்தியா - தென்கொரியா மோதின. இப்போட்டியில் இந்திய அணியை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தென்கொரியா அபார வெற்றிபெற்றது.

2023-09-24 12:17 GMT

கால்பந்து:

கால்பந்து ஆண்கள் குரூப் சுற்றில் இந்தியா - மியான்மர் இடையேயான ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது.

2023-09-24 12:10 GMT

வுஷூ:

வுஷூ போட்டியில் ஆண்கள் 56 கிலோ பிரிவில் பிலிப்பைன்ஸ் வீரரிடம் இந்திய வீரர் சுனில் சிங் தோல்வியடைந்தார்.

2023-09-24 12:04 GMT

வாலிபால்:

வாலிபால் போட்டியில் ஆண்கள் கிளாசிபிகேஷன் 1-6 பிரிவில் இந்தியாவை 3-0 என்ற புள்ளிகள் வீழ்த்தி ஜப்பான் வெற்றிபெற்றது.

2023-09-24 11:54 GMT

டென்னிஸ்:

டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் ரவுண்ட் 1 பிரிவில் 16வது போட்டியில் இந்தியா-நேபாளம் மோதின. இப்போட்டியில் நேபாளத்தை 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்திய ஜோடி ராம்குமார் ராமநாதன், சாய் சகித் வெற்றிபெற்றனர். அதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் 2ன் 4வது போட்டியில் சீனாவின் ஹு டின் மெர்கோவை 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியாவின் சுமித் நகல் அபார வெற்றிபெற்றார். 

2023-09-24 11:30 GMT

குத்துச்சண்டை

குத்துச்சண்டை பெண்கள் 45-50 கிலோ எடை பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் வெற்றிபெற்றார். வியட்நாம் வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

2023-09-24 11:27 GMT

நீச்சல்: பதக்க சுற்றுக்கு முன்னேறிய இந்தியா...!

நீச்சல் போட்டியில் ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டோக் பிரிவில் இன்று நடந்த தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் இன்று இரவு நடைபெறும் பதக்க சுற்று போட்டிக்கு நடராஜ் முன்னேறியுள்ளார்.

அதேபோல், நீச்சல் போட்டியில் பெண்கள் 4x100 மீட்டர் பிரிஸ்டைல் ரிலே (குழு) பிரிவில் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய அணி 7ம் இடம் பிடித்தது. இதன் மூலம் பதக்க வாய்ப்பு உள்ள இறுதி சுற்றுக்கு இந்திய அணி நுழைந்துள்ளது.  

2023-09-24 10:49 GMT

பெண்கள் ரக்பி செவன்ஸ்: குரூப் சுற்றின் 16வது போட்டியில் இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஜப்பான் 45-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 

2023-09-24 10:39 GMT

பதக்க பட்டியலில் 7வது இடத்தில் இந்தியா...!

ஆசிய விளையாட்டு போட்டிகள் பதக்க பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.

* துப்பாக்கிச்சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம்: வெள்ளி பதக்கம்

* துப்பாக்கிச்சூடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள்: வெண்கல பதக்கம்

* துடுப்பு படகு லைட் வெயிட் : வெள்ளி பதக்கம்

* துடுப்பு படகு ஆண்கள் 8 பிரிவு: வெள்ளி பதக்கம்

* துடுப்பு படகு ஆண்கள் பெய்ர்: வெண்கல பதக்கம் 

Tags:    

மேலும் செய்திகள்