சர்வதேச பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா தோல்வி
இவர் அரையிறுதியில் நெஸ்லிஹான் அரின் உடன் மோதினார்.;
image courtesy:PTI
லக்னோ,
சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, துருக்கியின் நெஸ்லிஹான் அரின் உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெஸ்லிஹான் அரின் 21-15 மற்றும் 21-10 என்ற நேர் செட் கணக்கில் உன்னதி ஹூடாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.