உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது

Update: 2022-08-24 16:50 GMT

Image Courtesy : AFP 

டோக்கியோ,

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று ஆட்டத்தில், இந்தியாவின் லக்சயா சென் ஸ்பெயின் வீரரான லூயிஸ் என்ரிக் பெனல்வர் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இதில் இந்தியாவின் லக்சயா சென், ஸ்பெயின் வீரரை 21-17, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய  சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்