இந்திய பீச் வாலிபால் அணியில் தமிழக வீரர், வீராங்கனைகள்

ஆண்கள் பிரிவில் 14 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் கலந்து கொண்டன.;

Update:2025-12-16 06:45 IST

சென்னை,

6-வது ஆசிய பீச் விளையாட்டு போட்டிகள் சீனாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய பீச் வாலிபால் அணியை தேர்வு செய்வதற்கான போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் நாடு முழுவதும் இருந்து ஆண்கள் பிரிவில் 14 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் கலந்து கொண்டன.

லீக் மற்றும் ‘நாக்-அவுட்’ சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் பரத் சோமு- ராஜேஷ் விநாயகமூர்த்தி, அபிதன் செந்தில்குமார்-பூந்தமிழன் உதயசூரியன் (தமிழ்நாடு), திவ்யசை லிங்காலா-மணிகண்ட ராஜூ, சலபதி ராமகிருஷ்ணம் ராஜூ-கிருஷ்ண சைதன்யா (ஆந்திரா) இணைகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்தும், பெண்கள் பிரிவில் தீபிகா- பவித்ரா, சசிகலா-கனிமொழி (தமிழ்நாடு), ரேவதி-ஸ்வேதா (புதுச்சேரி), தர்ஷினி-ஸ்வாதி (தமிழ்நாடு) ஜோடிகள் முறையே டாப்-4 இடங்களை பிடித்தும் இந்திய பீச் வாலிபால் அணிக்கு தேர்வானார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்